• Jul 23 2025

இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதற்கு தீபிகா சாட்சியாக நிமிர்ந்து நிற்கிறார்"- வாழ்த்துத் தெரிவித்த கங்கனா ரனாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான்  தீபிகா படுகோன். இவர் கடந்த ஆண்டு கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து  கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகவும் செயற்பட்டார்.

இப்போது  95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நாட்டு நாட்டு பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத், தீபிகா படுகோனேவை வாழ்த்தி டுவிட் செய்துள்ளார்.


அந்த டுவிட்டில் "எவ்வளவு அழகாக உள்ளார் தீபிகா படுகோன். ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைத்து, அதன் முகமாக, அதன் நற்பெயரை தோள்களில் சுமந்துகொண்டு, மிகவும் அன்பாகவும் நம்பிக்கையுடனும் பேசுவதைப் பார்ப்பது எளிதல்ல.

 இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதற்கு தீபிகா சாட்சியாக நிமிர்ந்து நிற்கிறார்". என கங்கனா ரனாவத்,பதிவு செய்துள்ளார்.இவரைப் போல இன்னும் பல பிரபலங்கள் தீபிகாவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement