• Jul 25 2025

விஜய்யின் வாரிசு படத்தில் இந்த காட்சிகள் எல்லாம் Delete - இயக்குநரே கூறிய தகவல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் தான் வம்சி. 

மேலும் அவரது புதிய கதையில் தான் விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி படு மாஸாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தோடு ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 73 கோடி வரை வசூலித்துள்ளது.

அத்தோடு அதிலும் வெளிநாடுகளில் படத்திற்கான வசூல் வேட்டை செமயாக நடக்கிறது என்கின்றனர்.

இந்த படத்தில் நிறைய காட்சிகள் டெலிட் செய்யப்பட்டுள்ளதாம்.மேலும் அந்த காட்சிகள் என்னென்ன என்பதை இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், பிரகாஷ் ராஜ்- சரத்குமார் Flashback, பிரகாஷ் ராஜை அலுவலகத்தில் சந்திக்கும் விஜய் காட்சிகள், குஷ்புவின் 17 நிமிட காட்சிகள், க்ளைமேக்ஸ் பிறகு பிரகாஷ் ராஜ்-சரத்குமார் காட்சிகள் என டெலிட் செய்யப்பட்டனவாம்.


Advertisement

Advertisement