• Jul 23 2025

விக்ரம் படத்தில் “பத்தல..பத்தல..” பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள்- ஏமாந்து போன ரசிகர்கள்

stella / 3 years ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்தோடு வசூலில் அள்ளிக் குவித்து விடும் என்றும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பிரபலங்கள் பலரும் விக்ரம் படக்குழுவினருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்தல.. பத்தல..” பாடலில் இடம்பெற்றிருந்த ‘ஒன்றியத்தின் தப்பாலே’ போன்ற அரசியல் வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டு உள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக இந்த வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தது . இதனால் தான் அந்த வரிகள் நீக்கப்பட்டு இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement