• Jul 26 2025

சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்த தேவயானி.. கடைசியில் அஜித்தால் ஏற்பட்ட சம்பவம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி.இவர் காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்த வகையில் விஜய், கமல் ஹாசன், கார்த்திக் ,அஜித் எனப் பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் படங்களில் பிஸியாக நடித்து வரும் நேரத்தில் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்த கொண்டார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் தன்னுடைய திரை பயணத்தையும், படங்கள் குறித்து, சொந்த வாழ்க்கையை பற்றியும் பகிர்ந்துகொண்டார்.மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் கூறினார். அப்படி தான் காதல் கோட்டை படம் குறித்து பேசினார்.

அவர் தெரிவித்ததாவது...

'காதல் கோட்டை படம் கமிட் ஆனதுபோது அந்த ஒரு படம் மட்டும் தான் என் கைவசம் இருந்தது. அந்த படம் ஓடவில்லை என்றால் நான், சினிமாவை விட்டு விலகி இருப்பேன்'.

'கண்டிப்பாக காதல் கோட்டை படம் வெற்றிபெறும் என நான் நினைந்து கடுமையாக உழைத்தேன். அப்படம் நாங்கள் அனைவரும் நினைத்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது'. அந்த படம் தான் அடுத்தடுத்து பெரிய படங்களின் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தது' என கூறியுள்ளார் தேவயானி.



Advertisement

Advertisement