• Jul 25 2025

அதைக் காட்டினால் மட்டும் தான் சினிமாவில் பிரபலமாக முடியும்... தேவயானி ஓப்பன் டாக்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவரே நடிகை தேவயானி. இவர் குறிப்பாக 90களில் கொடிக்கட்டி பறந்த ஒரு நடிகையாக காணப்படுகின்றார். 


அதுமட்டுமல்லாது அஜித், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமல்லாது பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 


இவ்வாறாக சினிமாவில் அறிமுகமாகி பிஸியாக நடித்து வந்த தேவயானி பிரபல இயக்குநர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளித்திரையில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது சின்னதிரையில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவயானி தமிழ் சினிமாவில் நடக்கும் பிரச்சனை குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அந்தவகையில் அதில் அவர், " தமிழ் சினிமாவில் அப்போது விட தற்போது தான் அதிகமாக கவர்ச்சி உள்ளது. இந்த காலகட்டத்தில் கவர்ச்சி காட்டும் நடிகைகள் மட்டும் தான் பிரபலமாக முடியும்" என்று கூறியுள்ளார். 

இவரின் இந்த பேட்டிக்கு ஒரு சிலர் ஆதரவினைத் தெரிவித்து வருவதோடு, மேலும் சிலர் எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement