• Jul 25 2025

புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்த தேவயானி.. பரபரப்பான கட்டத்தில் கதை திருப்பம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் இன்றைய எபிசோட்டில் சூர்யா ஜாஸ்மின் டீமை வீட்டை விட்டு துரத்திய நிலையில் ஹாசினி இவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார். இதன் பின்னர் மாரி சூர்யாவிடம் பேசி மீண்டும் வீட்டிற்குள் வர அனுமதி வாங்குகிறார்.

அதைத் தொடர்ந்து சமயபுரத்தில் மாரி தாத்தா நீலகண்டன் மற்றும் அவளது பெரியப்பா இருக்க, அப்போது வரும் ஊர் மக்கள் கோவில் திருவிழாவில் மாரிக்கு முதல் மரியாதை கொடுக்கப் போவதாக சொல்ல இதைக்கேட்டு அனைவரும்  சந்தோசமடைகின்றனர்.

இதற்கு அடுத்ததாக சகுந்தலா வீட்டுக்கு செல்லும் ஊர் பெரியவர்கள் திருவிழா பற்றி பேச வழக்கம்போல முதல் மரியாதை எனக்கு தானே என்று சொல்ல, இந்த முறை மாரிக்கு கொடுக்க வேண்டும் என ஊர் மக்கள் முடிவெடுத்து இருப்பதாக சொல்ல சகுந்தலா அதிர்ச்சி அடைகிறார்.

இதனால் கோபத்தில் இருக்கும் சகுந்தலா மாரி இந்த ஊருக்குள் எப்படி வர்றான்னு நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறார். எனினும் இதை அடுத்து மாரியின் பெரியம்மா போன் செய்து உனக்கு முதல் மரியாதை கொடுக்க போறாங்களாம் என சொல்ல மாரி சந்தோஷமடைகிறாள்.

அத்தோடு  சூர்யாவையும் திருவிழாவுக்கு கூப்பிட தாரா அம்மா இல்லாத நேரம் நான் வந்தா தப்பாகிடும் நீ மட்டும் போயிட்டு வா என சொல்ல, அதற்கு மாறி நீங்க வராம நானும் போக மாட்டேன் என்று சொல்கிறார். இதனால் இந்த விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் தாரா இதை சொன்னா கூட போக கூடாது என்னு தான் சொல்லுவா என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.

இதன் பின்னர் சகுந்தலா தாராவுக்கு போன் செய்து மாரி மட்டும் இந்த ஊருக்கு வந்தா அவளை நான் ஏதாவது பண்ணிடுவேன் என்று சொல்ல தாரா யோசித்தபடியே போனை வைக்கிறார்.


இதைத் தொடர்ந்து முத்து பேச்சியாக தேவயானி மாஸாக ஜிப்பில் வந்து இறங்கி சாமி போட்டோ முன்பு நின்று உன் கோவிலை எப்ப திறக்கப் போறோம். உனக்கு எப்ப கும்பாபிஷேகம் செய்யப் போறேன் என வேண்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனி வரும் எபிசோட்டில் தெரியவரும்.

Advertisement

Advertisement