• Jul 25 2025

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை வீடியோ மூலம் போட்டு காட்டிய தேவி- காலில் விழுந்து கதறிய காவியா?- ப்ரியா எடுக்கப் போகும் முடிவு என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் பார்த்திபன் மற்றும் காவியா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.

இதனை அடுத்து ப்ரியாவும் ஜீவாவினுடைய காதலை ஏற்றுக் கொண்டு விட்டார். இந்த நிலையில் காவியா பார்த்திபனின் திருமண வரவேற்பு நடைபெற்று வருகின்றது. இந்த ரிஷப்சனுக்கு வரும் தேவி ஜீவாவும் காவியாவும் காதலித்த விடயத்தை வீடியோவாக போட்டுக் காட்டியுள்ளார். 

இந்த வீடியோவை அனைவரும் பார்த்து விடுகின்றனர். துக்கம் தாங்க முடியாத காவியா தேவியின் காலில் விழுந்து அதை நிறுத்துங்க எனச் சொல்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. உண்மை தெரிந்ததால் ப்ரியாவும் பார்த்திபனும் என்ன முடிவு எடுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















Advertisement

Advertisement