• Jul 24 2025

விக்ரம் படத்தின் டீனாவுக்கு நான் தான் பண்ண இருந்தேன் கடைசில ஏமாத்திட்டாங்க- கவலை தெரிவித்த தேவிப்பிரியா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ்.இதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கினார். இப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து  இறுதியாக இவர் கமலை வைத்து எடுத்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி சூர்யா பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.


மேலும், இந்த படத்தில் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ஏஜன்ட் டினா தான். டினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வசந்தி. இவர் ஒரு டான்ஸர் ஆவார். இவர் முப்பது வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வருகிறார். 

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அவர்களிடம் 20 வருடங்களாக துணை நடன இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற பலரது படங்களில் நடனமாடி இருக்கிறார்.30 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்தும் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டது விக்ரம் திரைப்படத்தின் மூலம் தான். இந்த வாய்ப்பு அவருக்கு தினேஷ் மாஸ்டர் மூலமாக தான் கிடைத்தது.


 இப்படி ஒரு நிலையில் இந்த கதாபாத்திரத்தை தவற விட்டுள்ளதாக பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா கூறியிருக்கிறார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகையான தேவி பிரியாவை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதுவரை இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். மேலும், பல திரைப்படங்களில் கூட நடித்து இருக்கிறார். அதே போல இவர் ஒரு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியா, விக்ரம் படத்தின் டீனா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசியதாவது ‘இந்த படத்தில் டீனா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுப்பதற்காக ஆடிஷன் கூட சென்று விட்டேன். ‘டீனா ரிப்போர்ட்டிங் சார்’ என்ற வசனங்களை பேசி விட்டேன். ஆனால், என்னுடைய குரல் மிகவும் சிறிதாக கேட்கிறது. எங்களுக்கு ஒரு பெரிய பொம்பளை பேசுவது போல இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த வாய்ப்பை தவறவிட்டதை எண்ணி நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்’ என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement