• Jul 25 2025

சண்டைக்கு ரெடியான தனலட்சுமி-வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவிகள் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சில நாட்களிலேயே சூடு பிடித்து விட்டது. செப்டம்பர் 9ம் தேதி முதல் 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் மைனா நந்தினியும் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்நுழைந்தார்.

இரண்டு நாட்கள் அமைதியாக சென்ற பிக் பாஸ் வீடு இதன் பிறகு டாஸ்க்குகள் ஆரம்பித்ததுடன் வேற லெவலில் எனர்ஜி ஏற்றியது. முதல் வாரத்தில் சாந்தி, சென்ற வாரத்தில் அசல் உள்ளிட்டோர் எலிமினேஷனில் செய்யப்பட்டனர். முன்னதாக நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜி பி முத்து தனது மகனின் உடல்நிலை காரணமாக தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் டிவி சானலாக மாறப்போகின்றது என அறிவிப்பு வெளியானது.அதாவது சானல் பெயர் அந்த டிவி இந்த டிவி.

இவ்வாறு பிரிந்த குழு ஒவ்வொரு அணியாக ராசிபலன் சொல்லவேண்டும்.கிச்சனில் குக்கிங் ஷோ நிகழ்த்த வேண்டும்.அடுத்ததாக விவாதம் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என கூறுகின்றனர்.இந்த விவாதத்தில் தனலட்சுமி மற்றும் அசீம் பங்கு கொள்கின்றனர்.இவ்வாறாக கலக்கலாக ப்ரமோ வெளியானாலும் தனலட்சுமிக்கும் அசிமிற்கிடையில் பெரிய சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக இன்றைய ப்ரமோ கலகலப்பாக வெளியாகி உள்ளது.இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement