• Jul 25 2025

ரூபாய் நோட்டுக்களை லைட்டர் வைத்து எரித்த தனலட்சுமி- தண்டனை கொடுக்குமாறு விளாசித் தள்ளும் விமர்சகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் தனலக்ஷ்மி. இவருக்கு இந்த நிகழ்ச்சியில் மேலும் ஏராளமான வரவேற்புக் கிடைத்துள்ளது. இவர் பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் அசீம் மணிகண்டன் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றார். இது பார்வையாளர்களை கொஞ்சம் கடுப்படையச் செய்துள்ளது.

மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர முதல் விஜய் டிவி நாஞ்சில் விஜயன் உடன் வத்திக்குச்சி எனும் ஷார்ட் பிலிம்களில் எல்லாம் நடித்து வந்தார். இவர் விஜய் டிவி பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்துடன் இருந்ததால் தால் பிக்பாஸ் வாய்ப்புக் கிடைத்ததாக கூறப்படுகின்றது

இந்நிலையில், பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் தனது டுவிட்டர் பக்கத்தில் தனலட்சுமியின் ஒரு வீடியோவை ஷேர் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார். அந்த வீடியோவில், தனலட்சுமி ரூபாய் நோட்டுக்களை லைட்டர் கொண்டு எரித்து சாம்பலாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


மேலும், அந்த வீடியோவை ஷேர் செய்து இது சட்டப்படி தப்பாச்சே, இதற்கு ஏதும் தண்டனை இல்லையா என முதலமைச்சர் டுவிட்டர் ஐடி வரை டேக் செய்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜோ மைக்கேல். தனலட்சுமியின் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவரை கண்டித்து வருகின்றனர்.


தனலட்சுமி வியூஸுக்காக நிஜ ரூபாய் நோட்டுக்களைத் தான் எரித்தார் என ஜோ மைக்கேல் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால், அது நிஜ கரன்ஸியா? அல்லது ஃபேக் கரன்ஸியா என தெரியவில்லையே என சில பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement