• Jul 25 2025

புதுவீட்டில் மாலையும் கழுத்துமாக குடியேறிய தனம்.. எங்க 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தைக் காணலயே.. கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் மத்தியில் பேர் போன சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த சீரியலானது தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருப்பதோடு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பமும் பிரியத் தொடங்கி விட்டது. 


இதில் மூத்த அண்ணி தனம் ரோலில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா தனுஷ். இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் இவர் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


அதுமட்டுமல்லாது பல நடிகைகளுக்கு மலையாளத்தில் டப்பிங் கூட பேசி வருகிறார். இந்நிலையில் நடிகை சுஜிதா தற்போது புது வீடு கட்டி இருக்கிறார். அதன் கிரஹப்பிரவேசம் இன்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. 


அந்தவகையில் சுஜிதா, அவரது கணவர் மற்றும் மகன் உடன் புது வீட்டில் குடியேறி இருக்கிறார். இதுகுறித்த கிரஹப் பிரவேச புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கிருகப் பிரவேசத்திற்கு "பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வரலயா..?" எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement