• Jul 24 2025

தாங்க முடியலம்மா- உருட்டுக்கட்டையால் அடித்த இரண்டாவது மனைவி- கதறிய டான்ஸர் ரமேஷ்- வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் டான்ஸர் ரமேஷ்.இவரின் வித்தியாசமான நடன ஸ்டெப்புகளுக்கு அந்த நிகழ்ச்சியின் நடுவர்களான பாபா பாஸ்கர், நடிகைகள் சங்கீதா மற்றும் சினேகா ஆகியோர் பெரும் ரசிகர்களாக இருந்தனர்.

இந்நிலையில் டான்ஸர் ரமேஷ் கடந்த 27ஆம் தேதி தனது பிறந்த நாளில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. டான்ஸர் ரமேஷ் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் இது தற்கொலை அல்ல கொலைதான் என அவரது முதல் மனைவி சித்ரா போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆனால் டான்ஸர் ரமேஷ், குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது இரண்டாவது மனைவியான இன்பவள்ளி தெரிவித்துள்ளார். இந்நிலையில் டான்ஸர் ரமேஷின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டாவது மனைவி இன்பவள்ளி மற்றும் அவருடைய மகளுடன் உள்ளார் டான்ஸர் ரமேஷ்.

அப்போது அடி தாங்க முடியலம்மா... என்னை விட்டுடும்மா, உடம்பெல்லாம் வீங்கி விட்டது என கதறுகிறார் டான்ஸர் ரமேஷ். அப்போது கையில் உருட்டுக்கட்டையுடன் கோபமாக உட்காந்திருக்கிறார் இன்பவள்ளி. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சிதைந்து வீடே அலங்கோலமாய் கிடக்கிறது. அத்தோடு உடைந்த பாஃனை கையில் வைத்துக் கொண்டு பேசும் டான்ஸர் ரமேஷ், என்னை வேலைக்கு போக சொல்கிறார்கள், சம்பாதிக்க சொல்கிறார்கள். என்னால் இனிமேல் வேலைக்கு எல்லாம் போக முடியாது.


எனக்கு குடிக்க காசு கொடுக்க மாட்டேங்கிறார்கள். நான் தற்கொலை செய்யப் போகிறேன். இதில் யாருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் டான்ஸர் ரமேஷ், இன்பவள்ளியிடமும் ஓகேவாம்மா... சொல்லிட்டேன் என்று உறுதிப்படுத்தி கொள்கிறார். அப்போது நீ தற்கொலை பண்ணு என்கிறார் இன்பவள்ளி. இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் மதுவும் மாதுவும்தான் இவரது சாவுக்கு காரணம் என கூறி வருகின்றனர்.

மரணமடைந்த டான்ஸர் ரமேஷ் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் சிறு வேடத்தில் டான்ஸர் ரமேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கும் படத்திலும் டான்ஸர் ரமேஷ் கமிட் ஆகியிருந்த தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement