• Jul 24 2025

தனுஷ் அந்த பழக்கத்தை இப்போ நிறுத்திட்டாரு ..உணமையை உளறிய ரோபோ ஷங்கர்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரோபோ ஷங்கர் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். ரஜினி, அஜித்,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீப காலமாக ஓய்வில் இருந்தார். இதன் காரணமாக கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆயிற்று எனவும் பலர் கேள்வி எழுப்பினர்.

உடல் நிலை தேறி வந்த நிலையில் ரோபோ ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாழ்க்கை கொடுத்தார். அப்படித்தான் நான் சொல்வேன். மாரி ஷூட்டிங் ஸ்பாட்டில் பல விஷயங்களை நான் சேர்த்தேன். முக்கியமாக படத்தில் அவர் போட்டிருக்கும் கண்ணாடியை நான் தேர்வு செய்தேன்.

என்னிடம் முன்னாடி ஒரு பழக்கம் இருந்தது. அது என்னவென்றால் நான் நிறைய சரக்கு அடிப்பேன். ஆனால் தனுஷ் அதை மொத்தமாகவே நிறுத்திவிட்டார். எல்லோரும் ரிலாக்ஸுக்காக பார்ட்டி போன்ற சமயங்களில் குடிப்பார்கள். ஆனால் தனுஷ் அதையும் நிறுத்திவிட்டார். என்னையும் நிறுத்திவிட அறிவுறுத்தவும் செய்தார். அவர் சுத்த சைவம். ஒருமுறை எனது திருமண நாளுக்கு நாங்கள் வீட்டிலிருந்து செய்து கொண்டு போன சாப்பாட்டை எங்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்" எனவும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement