• Jul 25 2025

தனுஷ் மிஸ் செய்த சூப்பர்ஹிட் படத்தில் கார்த்திக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நாடகர்களில் ஒருவர். இவர் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்தது . இத்திரைப்படம்த்தின் பாடல்கள்,கதைக்கரு ,காட்சி அமைப்பு என்பவற்றிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



இதை தொடர்ந்து வாத்தி படம் வெளியாகும் என ரசிகர்கள்ஆவலோடு  காத்துகொண்டு இருக்கிறார்கள்.  இப்படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தனுஷ் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், சில சூப்பர்ஹிட் திரைப்படங்களையும் மிஸ் செய்துள்ளார். அப்படி அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று தான் நான் மகான் அல்ல.



இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது தனுஷ் தானாம். ஆனால், சில காரணங்களால் தனுஷால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் கார்த்தி இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹீரோவாக நடித்து படமும் மாபெரும் அளவில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததுடன் பெரும் வெற்றியும் பெற்றது.

Advertisement

Advertisement