• Jul 25 2025

தனது அம்மா முன்னாடியே பிரபல நடிகையின் மடியில் படுத்து உறங்கிய தனுஷ்- கடையில் நடந்தது என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தனுஷ் தற்போது உலகளவில் மிகப் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹோலிவுட் என மிகவும் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார் .ஆனால் தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவரது உருவத்தை பார்த்து பலரும், “இவரெல்லாம் ஹீரோவா” என்று பேசத் தொடங்கினர். மேலும் பல பத்திரிக்கைகள் அவரை “பென்சில்” என்று கிண்டல் செய்யத்தொடங்கினர். 

எனினும் தனது நம்பிக்கையை என்றும் கைவிடாத தனுஷ் தனது விடா முயற்சியில் தற்போது உலகமே போற்றும் நடிகராக உயர்ந்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த நடிகையான கௌசல்யா செந்தாமரை தனுஷுடன் நடித்தது குறித்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.


கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ், சாயா சிங், கருணாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “திருடா திருடி”. இதில் கௌசல்யா செந்தாமரை தனுஷின் தாயாராக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் காலை தனுஷின் தாயாரும் தந்தையும் உணவருந்திகொண்டிருந்தார்களாம்.


 அவர்களுக்கு முன்பு ஒரு மேசையில் கௌசல்யா செந்தாமரை அமர்ந்துகொண்டிருந்தாராம்.அப்போது தனுஷ் அங்கே வந்திருக்கிறார். முந்தைய நாள் இரவு படப்பிடிப்பு என்பதால் தனுஷ் தூங்கவில்லையாம். ஆதலால் தூக்க கலக்கத்தில் அப்படியே கௌசல்யாவின் மடியில் படுத்து தூங்கிவிட்டாராம். கௌசல்யா செந்தாமரை தனுஷை எழுந்திருக்கச் சொல்லியும் எழுந்திருக்கவில்லையாம். அப்போது அங்கே உணவருந்தி கொண்டிருந்த தாயார், அவரிடம், “பாவம் அவனை எழுப்பாதீங்க. நைட்டு தூக்கமே இல்லம்மா” என்று கூறினாராம்.


எனவே அன்று தனது மடியில் தனுஷை படுக்கவைத்துக்கொண்டாராம். அதன் பின் தனுஷ் எப்போதெல்லாம் படப்பிடிப்புக்குள் நுழைகிறாரோ அப்போதெல்லாம் கௌசல்யா அந்த மேசையில் உட்காரவே மாட்டாராம் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement