• Jul 23 2025

தனுஷ் நடிக்கும் 50-வது படத்தின் போஸ்டர் வெளியீடு! குஷியில் ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து ,தற்போது   வாத்தி & கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் - தெலுங்கில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்றும் தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.



இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.



வாத்தி படத்தை அடுத்து நடிகர் தனுஷ், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார்.இப்படம் 1930கள்-40களின் பின்னணியில்  பீரியட் படமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகிய பிரபலங்கள்  முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.



இந்நிலையில் தனுஷ் தனது அடுத்த 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகர் எஸ் ஜே சூர்யா, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement