• Jul 25 2025

நடிகையின் கணவர் அருகில் இருக்கும்போதே... நள்ளிரவில் தனுஷ் செய்த காரியம்... இறுதியில் விவாகரத்தில் முடிந்த சம்பவம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உயர்ந்து சினிமாவில் இன்று தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் தான் நடிகர் தனுஷ். அந்தவகையில் அவரது நடிப்பில் இறுதியாக வாத்தி படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு அடுத்ததாக தனுஷ் நடிக்கவுள்ள அவரது 5 ஆவது படம் குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தனுஷ் குறித்து ஒரு விடயத்தைக் கூறிப் பரபரப்பை கிளப்பியிருகின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக்கொண்டே இருப்பார். அதுமட்டுமல்லாது அந்த நடிகைகளிடம் நன்றாக வேலையும் வாங்கிக்கொள்வார்" எனக் கூறியுள்ளார்.


அத்தோடு "குறிப்பாக பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்திற்கு காரணமே தனுஷ்தான். அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும்போதே இரவு 12 மணிக்கு தனுஷ் ஃபோன் செய்து அவருடன் பேசுவார். இதனால் அந்த நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.  

இவர்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து இறுதியில் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்" எனவும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவ்வாறாக தனுஷ் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள இந்த விஷயமானது சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 


Advertisement

Advertisement