• Jul 23 2025

எக்ஸ் மனைவிக்கு செக் வைக்கும் தனுஷ்.. பிரபல நடிகரை வைத்துப் போடும் புதுப் பிளான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராத் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட்டைத் தாண்டி, டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் 'வாத்தி' திரைப்படம் ஆனது வெளியாகி இருக்கின்றது.


இந்நிலையில் இவரின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் .


கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். இவர்களோடு இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு பணிகள் யாவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


கடந்த மாதம் 'லால் சலாம்' திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி விலகுவதாக தனது ட்விட்டரில் செய்தி ஒன்றினைப் பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறுகையில் "பிரீ ப்ரொடெக்ஷன் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இனி இணைந்து வேலை செய்யப் போவதில்லை" என அதிரடியாக பதிவிட்டு இருந்தார். படம் ஆரம்பிக்கும் போதே இத்தைகைய பிரச்சனைகளுடன் தான் ஆரம்பமாகி இருந்தது.


இதையடுத்து லால் சலாம் படத்தில் இருந்து தற்போது நடிகர் விஷ்ணு விஷால் விலகி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதால் தான் இப்படி ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து வெளியேறி வருவதாக சொல்லப்படுகிறது. 


இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக, சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தனுஷ், தான் அடுத்து இயக்க உள்ள படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க பிளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு தனது முன்னாள் மனைவியின் படத்திலிருந்து விலகியவரை தன்னுடைய படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க தனுஷ் முயற்சிக்கும் இந்த தகவல் தான் தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது

Advertisement

Advertisement