• Jul 24 2025

கையில் பலத்த காயத்துடன் தாத்தாவின் பிறந்த நாளுக்கு வந்த தனுஷின் மகன் யாத்ரா- என்னாச்சு என்று பதறிய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களை தொடர்ந்து ட 2 கே கிட்ஸையும் அதிகம் கவர்ந்த நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு கண்டெக்டராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்து, பல்வேறு சவால்களைக் கடந்து, இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், தனித்தன்மையுடனும் காட்டியது என்றால் அது அவருடைய ஸ்டைல் தான் எனலாம்.


இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். இவரக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.


குறிப்பாக தனது பேரன்கள் அதாவது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த புகைப்படத்தில் தனுஷின் மூத்த மகன் கையில் காயம் ஏற்பட்ட கட்டு போட்டிருப்பதாக தெரிகிறது.இதை கவனித்த ரசிகர்கள், யாத்ரா கையில் என்ன ஆனது என்று கேட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement