• Jul 26 2025

தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே? வெளியானது முழு விவரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்  தற்போது வெளியாகி உள்ளது.

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.இப் படம் பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஜனவரி 5 அன்று ஆரம்பமாகியது.



மேலும் இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.  அத்தோடு இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.



இவ்வாறுஇருக்கையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை சிறுகளத்தூர் சாய் லியோ நகரில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. அத்தோடு கேப்டன் மில்லர்  திரைப்படம் தனுஷ் நடிப்பில் அடுத்து தயாராகி வருகிறது.




Advertisement

Advertisement