• Jul 25 2025

நிஜ 'வாத்தி' கே.ரங்கையாவை கௌரவப்படுத்திய தனுஷின் வாத்தி படக்குழு! வைரலாகும் புகைப்படங்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி / சார் திரைப்படம் ஒரு இளம் ஆசிரியரின் கதையை பற்றி சொன்னது. மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதுடன் சாதிய முறைக்கு எதிராக அவர்களை போராட செய்யும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கல்வி மூலமாக சமத்துவத்தை கொண்டாடவும் கற்றுக் கொடுக்கிறார். பல கடுமையான தடைகளை கடந்து வெற்றி பெறுகிறார் என்பதே கதை களம். 

இந்த படத்தில் வருவது போன்றே குணாதிசயங்களைக் கொண்டு, தன்னுடைய கல்வி சேவைகளுக்காக ஜனாதிபதி விருது வென்ற அரசு பள்ளி ஆசிரியர் கே.ரங்கையா வாத்தி படக்குழுவினர் சமீபத்தில் கௌரவப்படுத்தியுள்ளனர். 

வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி, ஆசிரியர் கே.ரங்கையாவை சந்தித்து இந்த படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் உரையாடினார். தன்னுடைய முயற்சிகளுக்காக இளம் வயதிலேயே ஜனாதிபதி விருது பெற்ற ஆசிரியராக இருப்பதுடன் தன்னுடைய சாவர்கேட் கிராமத்தில் உள்ள மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்ததில் ஒரு முக்கிய கருவியாக இருந்திருக்கிறார் கே.ரங்கையா.

இப்படி ஒரு அற்புதமான படத்தை உருவாக்கியதற்காக இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு அவர் நன்றி கூறியதுடன், வாத்தி / சார் படத்தில் உள்ள பல காட்சிகள் அவருடைய சுயசரிதை போன்றே இருந்ததாகவும் கூறினார். தங்களுடைய வாழ்க்கையை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட இவர் போன்ற ஆசிரியர்களுக்கு வாத்தி படக்குழு தங்களது வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களை கடவுளைப் போன்றே கருதவும் செய்கின்றது. “குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ” என்கிற ஸ்லோகம் இதைவிட வேறெதற்கும்  கச்சிதமாக பொருந்த முடியாது.

ஆசிரியர் கே.ரங்கையாவின் இந்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாகவும் ஒரு நூலகத்தை நிர்மாணிக்கவும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் 3 லட்சம் ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. பள்ளிகளில் நூலகம் அமைக்கவும் மாணவர்களின் கல்வி, சொந்த மற்றும் தொழில் முறை வெற்றிக்கு அத்தியாவசியமான புத்தகங்கள் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களை வாங்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement