• Jul 25 2025

தனுஷின் 'வாத்தி' படத்தின் அட்டகாசமான மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். அட்டகாசமான நடிப்பின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை உற்சாகப்படுத்திய இவர் தனகேன்ற தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். 

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் பிஸியாக  நடித்து வரும் தனுஷ். ஹாலிவுட்டிற்கும் சென்று தன்னை மிகப்பெரிய நட்சத்திரமாக நிலை நிறுத்தியுள்ளார். தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப் பட்ட வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17 ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. விமர்சன ரீதியாக தமிழ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை 100 கோடிக்கும் மேல் உலகெங்கிலும் வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக வெளியான வாத்தி திரைப்படம் இன்று முதல் பிரபல ஒடிடி தளமான Netflix தளத்தில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில்  வாத்தி திரைப்படம் உருவான விதம் மற்றும் படப்பிடிப்பு தளத்தின் வீடியோவை சிறப்பு தொகுப்பாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement