• Jul 26 2025

CSK ஆட்டத்தைக் கண்டு களிக்க முடியோடு வந்த தனுஷ்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படம் மும்முரமாக உருவாகி வருகிறது. சினிமாவில் எந்தளவிற்கு பிசியாக இருக்கின்றாரோ அதேபோல் பொழுது போக்கு நிகழ்வுகளிலும் இவர் அடிக்கடி கலந்து கொண்டு வருவார்.


அந்தவகையில் நேற்றைய தினம் சென்னை சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சென்னையில் நடைபெற்ற இந்த விளையாட்டை நேரில் கண்டு களிப்பதற்காக திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் சென்றிருந்தனர். அதாவது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஸ், விஜய்யின் மானேஜர் ஜெகதீஸ் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.


இந்நிலையில் இவர்களில் ஒருவராக நடிகர் தனுஷும் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட்டை காண சென்றுள்ளார். அங்கிருந்து அவர் இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அவர் நீண்ட தலைமுடி வளர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement