• Jul 25 2025

ஆக்‌ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் தோனி..? சாக்ஷிதோனி சொல்லிய சர்ப்ரைஸ் தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தோனி தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம்  ‘Let's Get Married’. இந்தப்படத்தை இயக்குநர் ரமேஷ் திலகமணி இயக்கி இருக்கிறார். ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நடிகை நதியா, யோகிபாபு, மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இந்தப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் சார்ந்த புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. களத்தில் தோனியின் மனைவி சாக்‌ஷியே இறங்கி படக்குழுவுடன் இணைந்து படத்தை புரோமோட் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சாக்‌ஷியிடம் தோனி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

பதிலளித்த அவர், “ நல்ல கதையாக இருக்கும் பட்சத்தில் தோனி நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு கேமரா கூச்சமெல்லாம் கிடையாது. 2006ம் ஆண்டிலிருந்து அவர் விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு ஆக்‌ஷன் படங்கள்தான் செட்டாகும். ஒரு வேளை தோனி கதாநாயகனாக அறிமுகமானால் நிச்சயம் அந்தத்திரைப்படம் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும். நல்லக்கதை மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படமாக அந்தப்படம் இருக்குமென்றால் தோனி அந்தப்படத்தில் நடிப்பதை பற்றி யோசிப்பார்” என்று கூறியிருந்தார்.



Advertisement

Advertisement