• Jul 25 2025

நடிகை மீனா ஆண் வேடம் போட்டு நடித்தாரா? எந்த படத்தில் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா துறையில் 80 மற்றும் 90 ஸ் களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எத்தனை படங்கள் இவர் நடித்திருந்தாலும் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் தான் மீனாவின் சினிமா கரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

கடந்த வருடம் இவரது கணவர் இறப்பிற்கு பின் துயரத்தில் இருந்து வந்த இவர் தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். இப்படி இருக்கையில் இவர் ஆண் வேடத்தில் நடித்திருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது 1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறுவன் கதாபாத்திரத்தில் நடிக்க குழந்தையை தேடி உள்ளனர்.

அப்போது சிவாஜி கணேசன் ஒரு திருவிழாவிற்கு செல்ல அங்கு மீனாவை பார்த்துள்ளார். பார்த்தவுடன் அவருக்கு என்ன தோணுச்சு என்று தெரியவில்லை. இயக்குநரிடம் வந்து மீனாவை இந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கூற அதற்கு அவர் பையனாக நடிக்க வேண்டும் என்றால் மீனா முடி அனைத்தையும் வெட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடைசியில் சிவாஜி கணேசன் இயக்குநரிடம் ஏதேதோ பேசி சரி கட்டி  அந்த கதாபாத்திரத்தில் பெண் குழந்தை நடிப்பது போன்று கதையை மாற்றி விட்டார். அதன் பிறகு தான் மீனா அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எப்பயோ நடந்த இந்த விஷயம் இப்போது மீனா ஆண் வேடத்தில் நடித்தார் என்று இணையத்தில் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


.

Advertisement

Advertisement