• Jul 25 2025

நடிகை பூஜா ஹெக்டே உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றாரா?- புதுப் புரளியைக் கிளப்பிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே.இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் வாழ்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார்.

பின்னர் மீணடும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இருப்பினும் இப்படம் தோல்வியையே சந்தித்தது. இதனை அடுத்து தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .


அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில் பிரபல விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து, நடிகை பூஜா ஹெக்டே, தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதாகவும் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.


இதே உமர் சந்துதான் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய்சேதுபதி மெரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்பின் போது நடிகை கத்ரீனா கைஃபிற்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார் என்று பதிவிட்டு அவரது ரசிகர்களிடம் வாங்கி கண்டிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement