• Jul 25 2025

விவாகரத்துக்கு பின் வெளிநாட்டு நபரை காதலிக்கிறாரா டிடி...அவரே உடைத்த அந்த தகவல்..!

dd
Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கக் கூடிய பல முன்னணி தொகுப்பாளர்களும் இருக்கின்றனர். இவர்களில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.



இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் பின்பு நடிப்பில் பயங்கர பிஸியாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.



இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி, நாளை வெளியாகவுள்ள காஃபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டு பேசிய டிடி, ஒரு முறை வெளிநாட்டில் ஜேர்மன் நபர் ஒருவருடன் மாலை நேரத்தில் ஒன்றாக காஃபி கொடுத்ததாக சொல்லியுள்ளார்.


ஆனால், அவர் யார், அவர் பெயர் என்ன என்பதை கூறமாட்டேன் என்று டிடி கூறியுள்ளார். இதை கவனித்த நெட்டிசன்கள் ஒரு வேலை அதுவா இருக்குமோ என்று கூறி வருகிறார்கள்.. 



 


Advertisement

Advertisement