• Jul 25 2025

தேவயானி பிகினி போட்டு லிப்லாக் அடிக்கலையா?- பயில்வானுக்கு செக் வைத்த ஷகீலா… தரமான சம்பவம்…

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் பயில்வான் ரங்க நாதன்.இவர் தற்பொழுது யூடியூப் தளங்களில் பல நடிகைகளின் சொந்த வாழ்க்கையை குறித்து அநாகரீகமாக பேசுவதாக அவர் மீது பல புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கூட நடிகை ரேகா நாயர், தன்னை குறித்து அநாகரீகமாக பேசியதாக பயில்வான் ரங்கநாதனிடம் பீச்சில் சண்டை போட்ட வீடியோ வைரல் ஆனது.

இந்த நிலையில் ஒரு முறை தனது வீடியோ ஒன்றில், ஆபாசமாக நடித்த நடிகைகள் என்று பலரையும் விமர்சித்த பயில்வான் ரங்கநாதன், தேவயானியை பற்றிக் குறிப்பிடும்போது மட்டும் அவர் பிகினி உடையில் நடித்ததில்லை எனவும் அவர் குடும்பப் பாங்கான கதாப்பாத்திரங்களிலேயே நடித்தார் எனவும் கூறினார்.


இதனை தொடர்ந்து சமீபத்தில் ஷகீலா, பயில்வான் ரங்கநாதனை பேட்டி கண்டிருக்கிறார். அதில் பயில்வானுடன் பல காரசாரமான விவாதங்களை நடத்தினார் ஷகீலா. அப்போது பயில்வான் ரங்கநாதன் தான் நடிகைகளை குறித்து கூறுவது பொய் இல்லை, எல்லாமே உண்மைதான் என பேசினார்.


அப்போது ஷகீலா, “நீங்கள் தேவயானி பிகினி உடையில் இது வரை நடித்ததில்லை எனவும் அவர் குடும்பப் பாங்கான கதாப்பாத்திரங்களிலேயே நடித்துள்ளார் எனவும் கூறினீர்கள். ஆனால் தேவயானி தொட்டா சினிங்கி என்ற திரைப்படத்தில் பிகினி உடையிலும் நடித்திருக்கிறார் லிப் லாக் காட்சியிலும் நடித்திருக்கிறார்.


எல்லாவற்றையும் அலசும் நீங்கள் ஏன் இதை மட்டும் விட்டுவிட்டீர்கள். எப்போதும் நீங்கள் உண்மையை கூறுவதாக சொல்கிறீர்களே, அப்படி என்றால் தேவயானி குறித்து கூறியது தவறுதானே?” என்று கேட்டார். ஆனால் பயில்வான் ரங்கநாதனோ தனது தவறை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த பேட்டி இணையத்தில் மிகவும் வைரலாக பரவிக்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement