• Jul 25 2025

அர்ணவுடன் சேர்ந்து விட்டாரா திவ்யா? வெளியான தகவலால் குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் “செவ்வந்தி” சீரியில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.எனினும் இதனைத் தொடர்ந்து திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.அத்தோடு இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இவ்வாறுஇருக்கையில்  சிறிதுக்காலம் சென்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம்  தெரிவித்து இருக்கிறார்.அர்ணவ் “ குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இவ்வாறுஇருக்கையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யா வாழ்க்கையின் என்ன நடந்தாலும் அதனை ரசிகர்களுக்கு போஸ்ட்டின் மூலம் கூறி வருகிறார்.

அந்த வகையில் குழந்தை பிறந்துள்ளது என்பதனை கூட இவர் மருத்துவமனையிலிருந்து போஸ்ட் போட்டுள்ளார்.


இதனையும் தாண்டி தற்போது நடிகர் அர்ணவ்வுடன் சேர்ந்து விட்டதாகவும் அவர் சமீபத்தில் ஒரு பதிவில் மறைமுகமாக கைகளை பிடித்து கொண்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எனினும் இதனை பார்த்த ரசிகர்கள்,“ உங்கள் குழந்தை மிகவும் லக்கி.. இதனால் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement