• Jul 26 2025

உதடு வீங்கியிருக்கே கோபி ஏதாவது பண்ணிட்டாரா?- பாக்கியலட்சுமி ரேஷ்மாவை மோசமாக கலாய்த்த ராஜு

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் ராஜு வீட்டில பார்ட்டி. இந்த நிகழ்ச்சியினை பிக்பாஸ் சீசன் 5 இன் டைட்டில் வின்னரான ராஜு தொகுத்து வங்கி வருகின்றார். அதே போல தொகுப்பாளினி ப்ரியங்காவும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி வருகின்றார்.

கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா ஈரமான ரோஜாவே சீரியல் கேபிரில்லா பிக்பாஸ் ஜுலி ஆகியோர் பங்குபற்றி நிகழ்ச்சியை சுவாரஸியமாக கொண்டு சென்றனர்.

இந்த நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மாவிடம் அந்த தொடர் பற்றி வரும் விமர்சனங்களை ராஜு படித்து காட்டினார்.

"லிப்ஸ்டிக் போட்டு ராதிகா உதடு வீங்கிவிட்டது.. சகிக்கல" என ஒருவர் கமெண்ட் செய்ததாக ராஜு கூற, அதற்கு லிப்ஸ்டிக் காரணம் இல்லை என அவர் பதில் அளித்தார். "பிறகு.. கோபி எதாவது பண்ணாரா" என கிண்டலாக கேட்டார் ராஜு. இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement