• Jul 25 2025

சல்மான்கானுடன் டேட்டிங் சென்றேனா..? உண்மையை போட்டுடைத்த நடிகை பூஜா ஹெக்டே!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெக்டே, சல்மான்கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன. 

இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்த பூஜா நேற்று இது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் ரன்வீர் சிங்குடன் நடித்த சர்க்கஸ் திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தேன். ஆனால் அது தோல்வியில் முடிந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.

தற்போது சல்மான் கானுடன் நடித்த படம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கூடவே எங்கள் இருவரை பற்றியும் கிசுகிசுக்களும் சேர்ந்து பரவி வருகிறது. ஆனால் நான் இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். 

தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன். சல்மான் கானுடன் என்னை டேட்டிங் செய்வதாக வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் அது உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement