• Jul 25 2025

மீனாட்சிக்கு குழந்தை பிறந்திருச்சா?- நம்ம வீட்டுப் பொண்ணு சீரியலின் இறுதிநாள் ஷுட்டிங் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியல் பகல் நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் நம்ம வீட்டுப் பொண்ணு. இந்த சீரியலில் மீனாட்சியையும் கார்த்திக்கையும் அவரது பெரியப்பா குடும்பப் பொறுப்பு வரவேண்டும் என்பதற்காக சென்னைக்கு அனுப்பி இருந்தனர்.

சென்னைக்கு வந்த கார்த்தியும் மீனாட்சியும் சென்னையில் ஒருவர் வீட்டில் தங்கி இருக்கின்றனர். அத்தோடு வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும் இருவரும் முடிவெடுத்தனர். இருப்பினும் அவருடைய வீட்டுக்காரர் மீனாட்சியையும் கார்த்திக்கையும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.


இது ஒரு புறம் இருக்க மீனாட்சி தற்பொழுது கர்ப்பமாக இருக்கின்றார். இப்படியான நிலையில் மீனாட்சியை யாரோ கடத்தி விட்டனர். இதனால் கார்த்திக் மீனாட்சியை தேடிக் கொண்டிருக்கின்றார். எப்படி மீனாட்சியைக் காப்பாற்றி தன்னுடைய குடும்பத்துடன் இணையப் போகின்றார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் மீனாட்சிக்கு குழந்தை பிறந்துள்ளதோடு இருவரும் தம்முடைய குடும்பத்துடன் இணைந்து விட்டது போல ஷுட்டிங்கின் இறுதி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம். 


Advertisement

Advertisement