• Jul 25 2025

டைவர்ஸ் பற்றி பிரியங்கா இப்படி பேசினாரா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாராக ப்ரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக சென்ற அவர் சர்ச்சைகளில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்டார்.

ஆனால் அதற்கு பிறகு அவர் வழக்கம்போல விஜய்டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி காமெடியாக பேசி எல்லோரையும் மீண்டும் ஈர்த்துவிட்டார்.அத்தோடு பிக் பாஸ் சர்ச்சைகளை எல்லாம் தற்போது ரசிகர்கள் தற்போது நிச்சயம் மறந்தே போயிருப்பார்கள்.

பிரியங்கா விஜய் டிவி ஷோக்கள் தொகுத்து வழங்குவது மட்டுமின்றி தனியாக youtube சேனலும் நடத்தி வருகிறார். அதில் அவர் பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


இவ்வாறுஇருக்கையில்  லண்டன் சென்ற வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார். மேலும் அதில் அவர் எமோஷ்னலாக ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.

"விஜய் டிவியில் 10 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன், தொகுப்பாளராகி 14 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இனி கிடைக்கும் நேரத்தில் ஊர் ஊராக சுற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. அதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்."

"வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக புரிந்துகொண்டேன். பயணம் தொடங்கும்போது வாழ்க்கையில் நிறைய பேர் வருவாங்க. நடுவில் அவர்கள் போவாங்க, வருவாங்க. ஆனால் இறுதிவரை நாம் மட்டும் தான்" என பிரியங்கா கூறி இருக்கிறார்.இவ்வாறு இவர் கூறியதை அடுத்து பிரியங்கா இப்படி கூறிட்டாரே என ஷாக்கடைந்து போயுள்ளனர்.


Advertisement

Advertisement