• Jul 25 2025

கீர்த்தி சுரேஷிற்கு புதிதாக கார் வாங்கிக் கொடுத்த விஜய்..? இந்த விஷயம் சங்கீதாவிற்குத் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

என்னதான் தமிழ் சினிமாவின் டாப் நாயகனாக இருந்தாலும் நடிகர் விஜய் குறித்து சமீபகாலமாக பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது தந்தைக்கும் விஜய்க்கும் சண்டை எனவும் தற்போது அவர்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. 


அதன் பின்னர் விஜய்க்கு விவாகரத்து ஆகிவிட்டது என்றும், அவருடைய மனைவி சங்கீதா தனது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் ஒரு கிசுகிசு கிளம்பியது. இருப்பினும் ஒரு சில நாட்களின் பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். இவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்ற விடயம் ரசிகர்களுக்குத் தெரியவந்தது.


இதனையடுத்து சமீபகாலமாக விஜய் கீர்த்தி சுரேஷை காதலிப்பதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஒரு செய்தி உலா வந்தது. இறுதியில் அதுவும் வதந்தி தான் என்பது தெரிய வந்தது.


ஆனால் தற்போது புதிதாக சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை விஜய் பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த விஷயம் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கும் தெரியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த விஷயத்தை திரைப்பட விமர்சகரும், சென்னார் குழுவை சேர்ந்தவருமான உமைர் சந்து என்பவர் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இருப்பினும் இப்படியொரு சம்பவம் நிஜத்தில் நடக்கவில்லை எனவும், இது பொய்யான பதிவு எனவும் கூறப்படுகின்றது.

உமைர் சந்து இப்படி தவறான பதிவுகளை வெளியிட்டு வருவதற்கு காரணம் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பது தான் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement