• Jul 25 2025

பல கோடி சம்பளத்தை குறைத்தாரா சிம்பு..இது தான் விஷயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகிற்கு கம்பாக் கொடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு .இவர்  நடிப்பில் வருகிற 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் STR 48.

கமலின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க தேசிங் பெரியசாமி இயக்குகிறார். அத்தோடு இவர் இயக்கத்தில் இதற்க்கு முன் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.


இதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது படத்தை சிம்புவை வைத்து இயக்குகிறார்.அத்தோடு கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை முடித்தபின் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்குவதாக இருந்தார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.

ஆனால், அந்த கூட்டணி கைகூடவில்லை. இதனால் ரஜினிக்கு எழுதிய கதையை சில விஷயங்களை மட்டும் மாற்றி சிம்புவுக்காக தயார் செய்துள்ளாராம். எனினும் ஏற்கனவே இப்படத்திற்காக சிம்பு தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளார் என தகவல் வெளிவந்தது.


இவ்வாறுஇருக்கையில் தற்போது ரூ. 40 கோடி சம்பளம் கேட்டு வந்த சிம்பு, கமல் தயாரிப்பு, ரஜினிக்காக எழுதிய கதை என்பதினால் ரூ. 10 கோடி குறைத்துக்கொண்டு, ரூ. 30 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement