• Jul 24 2025

ஷூட்டிங்கில் இருந்து கோபத்தில் வெளியேறினாரா சிம்பு... காரணம் சட்டையை கழட்ட சொன்னதா..? இயக்குநர் கொடுத்த விளக்கம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிம்பு. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் கலக்கியிருக்கின்றார். அதன் பின்னர் தனது தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் 'காதல் அழிவதில்லை' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்தார்.


அதனைத் தொடர்ந்து 'தம், குத்து, கோவில், அலைகள் ஓய்வதில்லை, விண்ணைத்தாண்டி வருவாயா' என இவரது திரைப்பயணம் ஆனது நீண்டு கொண்டே செல்கின்றது. இவ்வாறாக பல படங்களில் நடித்திருந்த இவர் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். மேலும் இவருக்கு 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கி கௌரவித்திருந்தது. 




இவ்வாறாக தனது திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்ற சிம்பு தற்போது நடிக்கும் படம் 'பத்து தல'. 'மஃப்டி' என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் இந்த 'பத்து தல' என்ற படம். இப்படத்தினை ஒபேலு என் கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தினுடைய முதற்கட்ட ஷூட்டிங் ஆனது கர்நாடகாவில் நடைபெற்று வருகின்றது.




இந்நிலையில் அந்த ஷூட்டிங்கில் இருந்து சிம்பு கோபத்துடன் பாதியிலேயே வெளியேறிவிட்டார் என ஒரு செய்தி சமீபத்தில் பரவியது. அதாவது சிம்பு சட்டையை கழற்றி நடிக்க சொன்னதற்காக சிம்பு ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிவிட்டார் என செய்தி பரவியது. சமீப காலமாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வரும் சிம்பு பற்றி தற்போது இப்படி ஒரு செய்தி வந்தது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.



இந்நிலையில் இது உண்மை அல்ல வதந்தி என தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தின் இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா தனது ட்விட்டரில் இது தொடர்பான விளக்கம் விளக்கம் ஒன்றினை அளித்திருக்கின்றார்.