• Jul 25 2025

ரசிகர்களின் கணிப்பு தவறாகிப் போய் விட்டதா?- பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றது.மேலும் 60 நாட்களை இந்த நிகழ்ச்சி எட்டியுள்ளதால் டாஸ்க்குகளும் கடுமையாக வழங்கப்பட்டு வருகின்றன.

 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்கிற முனைப்புடன் போட்டி போட்டு கொண்டு, காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் தங்களுடைய விளையாட்டை விளையாடி வருகின்றனர்.அந்த வகையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து  ஆயிஷா மற்றும்  ஆகியோர் வெளியேறினார்கள்.


எனவே இந்த வார முடிவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், இது குறித்த தகவல் தற்போது வெளியாகி பல ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில், அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன், ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில், குறைவான வாக்குகளுடன் மணிகண்டன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்து கூறி வந்தனர்.

மேலும் வழக்கம்போல் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், ரசிகர்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று அசீம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் விக்ரமன், மூன்றாவது இடத்தில் ஏடிகே ஆகியோர் இருப்பதாக கூறப்பட்டது.


ஆனால் இந்த முறை ரசிகர்களின் கணிப்பு தவறாகிப் போய் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி போட்டு விளையாடி வந்த ஏடிகே தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும், மணிகண்டன் ரக்ஷிதா ஆகியோர் நூல் இழையில் இந்த வாரம் ஏவிக்ஷனில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.




Advertisement

Advertisement