• Jul 25 2025

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினாரா முக்கிய பிரபலம்..? அவரே வெளியிட்ட பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

டிஆர்பி-யில் 2-ம் இடத்தை பிடித்திருக்கும் புத்தம் புதிய சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியல் ஆணாதிக்க தோடு இருக்கும் ஒரு சிலரைப் பற்றியதாகவும் அவர்களுடைய குணத்தால் கஷ்டப்படும் பெண்களின் மனக்குமுறலை சொல்வதாகவும் சீரியல் அமைந்துள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி மீண்டும் வீட்டிற்கு வந்து எதிர்பாராத திருப்பங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இரவு 9.30 மணிஅளவில் ஒளிபரப்பாகும் இத்தொடரை அதற்கு முன்பாகவே ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியலின் முக்கிய நடிகர் ஒருவர் விலகிவிட்டதாக செய்திகள் பரவி வந்தன.நடிகர் சௌமேன்.இவர் இந்த சீரியல் கதாநாயகியான ஜனனியின் அப்பாாக  நடித்து வருகின்றார்.இந்த சீரியலில் இவருக்கு நாச்சியப்பன் காரெக்டரில் நடித்து வருகின்றார்.


அத்தோடு இவர் ஜீதமிழில் ரீசென்ட் ஆக ஒளிபரப்பான இந்திரா எனும் சீரியலில் நடித்து வருகின்றார்.இவ்வாறுஇருக்கையில் இவர் எதிர்நீச்சலில் சிறிது காலம் காட்டாத நிலையில் இவர் விலகிவிட்டார் எனக் கூறப்பட்டது.

ஆனால் அதை மறுத்து அவர் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதாவது சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பது எல்லாம் பொய்..அதை யாரும் நம்பாதீங்க..பொய் செய்திகளை பரப்பாதீங்க என அவரே அதற்கு விளக்கம் அளித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.



Advertisement

Advertisement