• Jul 25 2025

குழந்தை பெற்றுக் கொள்ள சொன்னார்களா?- முதல் முறையாக தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த வி.ஜே ரம்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!


சமீபகாலமாக சின்னத்திரை மூலம் கதாநாயகியாக மாறியவர்கள் பலர் இருக்கின்றனர். இவ்வாறு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபல்யமானவர் வி.ஜே ரம்யா. இவர் தற்பொழுது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

ரம்யா தற்போது வரை பல தமிழ் திரைப்பட இசை வெளியீடு விழாக்களில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தன் வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து பேசி வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அவர் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக். ரம்யாவுக்கு சொந்தமாக “ஸ்டே ஃபிட் வித் ரம்யா” என்ற யூடியூப் சேனல் உள்ளது, அதில் அவர் “எப்படி ஃபிட்டாக இருப்பது” போன்ற வீடியோக்களை பதிவேற்றுகிறார்.


அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தொகுப்பாளினி ரம்யாவிடம் அவரது விவாகரத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், அது ஒரு 6 வருடத்திற்கு முன் நடந்த ஒரு விஷயம் எனக்கே நியாபகம் இல்லை. கண்டிப்பா வருத்தம் இருந்தது, Depression இருந்தது.

எனக்கு ஏன் முதலில் இப்படி நடந்தது, எதுவும் தெரியாமல் என்னை மற்றவர்கள் ஏன் தவறாக பேசுகிறார்கள் என நிறைய வருத்தமாக இருந்தது.இந்த தாக்கத்தில் இருந்து வெளியாக எனக்கு 6 முதல் 8 மாதம் ஆனது, ஆனால் இந்த ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வரும்போது எனக்கு தைரியம் கிடைத்தது என பேசியுள்ளார்.


திருமணம் ஆகி குழந்தை பெத்துக்கனுமா என்று கேட்டுள்ளார்,யாரை திருமணம் பண்ணனும், பெத்துக்கணுமா என்பது அவர்களின் விருப்பம். என்னுடைய வாழ்க்கை என்று வெளிப்படையாக கூறியுள்ளார். எனக்கு ஒரு சரியான காரணம் இருந்தது அதனால் விவாகரத்து செய்தேன் என்று ரம்யா கூறியுள்ளார். கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள அவர்களது பெற்றோர்கள் வற்புறுத்தி இருப்பார்கள், அதனால் தான் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement