• Jul 25 2025

ஆப்பிரேஷன் செய்ததை மறந்திட்டு இப்பிடி சேட்டை பண்ணுறீங்களேம்மா- பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் போட்ட அலப்பறை- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.இவர் அஜித்தின் வாலி படம் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார்.

இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுஜிதா புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.


அதுமட்டும் இல்லாமல் இவர் டிவியில் 30 சீரியலுக்கு மேல் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

மேலும் அண்மையில் புதிய வீட்டினை வாங்கியிருந்தார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பனவும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது தன் வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement