• Jul 25 2025

"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா"- ஜனனியை பற்றிக் கூறிய குணசேகரன்.. சரியான முகத்தடி கொடுத்த அரசு.. 'எதிர்நீச்சல்' இன்றைய ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்நிலையில்  அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் ஒரே சீரியலாக இது இருக்கின்றது. 


இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக எல்லோரும் சொப்பிங் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஜனனிக்கு போன் பண்ணிய ஈஸ்வரி "நான் கிளம்பி வந்திடட்டுமா" எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி "பயந்து ஓடி வந்திட்டால் திரும்ப நாலு சுவருக்குள்ள முக்கிட்டுத் தான் கிடைக்கணும். என்ன செய்றது என்று நீங்களே முடிவு பண்ணுங்க" எனக் கூறுகின்றார். 

மேலும் மறுபக்கத்தில் "குணசேகரன் தங்களை தெருத்தெருவாக சுத்த விட்டிற்றான்" என ஜான்சி ராணி கோபத்தில் பொங்குகின்றார். 


மேலும் உடை வாங்கும் இடத்தில குணசேகரனிடம் "எனக்கு ஜனனி அண்ணியே choose பண்ணட்டும்" என ஆதிரை கூறுகின்றார். அதற்கு குணசேகரன் "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, SKR குடும்பத்தில் ஜனனியை தத்தெடுத்திட்டாங்க" எனக் கூறுகின்றார்.


அதற்கு அரசு "அவங்ககிட்ட எங்க வீட்டுக் குணம் இருக்கு, தத்தெடுத்தால் கூட தப்பில்லையே" எனக் கூறுகின்றார்.

Advertisement

Advertisement