• Jul 25 2025

ரச்சிதாவிடம் எனது காதலைப் பற்றி பேசுவியா?- ஷிவினைத் தூது அனுப்பிய ரோபேட் மாஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆறாவது சீசனை தொட்டுள்ள இதிலும் கமல்ஹாசனை தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சென்ற வாரம் அந்த டிவி இந்த டிவி என்ற டாஸ் மூலம் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வந்தனர்.

தன்னை முன்நிறுத்திக்கொள்ள சண்டையிடும் தனலட்சுமி எப்போதும் மலையாளத்தில், ஆங்கிலத்தில் என மாற்றி மாற்றி ஷெரினா பேசியது என  பல குற்றச்சாட்டுகளை கூறி செரினா வெளியே அனுப்பப்பட்டார். இதற்கிடையே தான் வெளியே செல்ல வேண்டும் என ஆயிஷா அடம் பிடித்திருந்தார்.


அத்தோடு செரினா வெளியேறினாலும் ஆயிஷா இன்னும் மன அழுத்தத்திலேயே தான் இருக்கின்றார். இந்த நிலையில் சுவாரஸியமான விடயம் ஒன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்துள்ளது. அதாவது ரோபேட் மாஸ்டர் ஷிவினிடம் சென்று நான் ரச்சிதாவைக் காதலிப்பதை அவளிடம் சொல்லுவியா என்று கேட்கிறார்.

அதற்கு ஷிவின் இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன். தேவையில்லாமல் என்னை கோர்த்து விடாதீங்க நீங்களே போய் சொல்லுங்க என்று பதிலடி கொடுக்கின்றார். அத்தோடு அவர்கள் பேசிட்டு இருக்கும் இடத்திற்கு ரச்சிதா வர ரோபேட் மாஸ்டர் அந்தப் பேச்சை மாற்றி பேசி சமாளித்து விடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement