• Jul 25 2025

திடீர் மாரடைப்பால் சரிந்து விழுந்த இயக்குநர்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல்கள் மற்றும் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் நாகா. அதிலும் குறிப்பாக 'மர்ம தேசம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன்' போன்ற சீரியல்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது.


இவ்வாறாக சின்னத்திரையில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் சங்கர் தயாரிப்பில் நந்தா மற்றும் சாயாசிங் நடிப்பில் வெளியான 'ஆனந்தபுரத்து வீடு' என்ற படத்தை இயக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர் சில திரைப்படங்களில் சினிமேட்டோகிராபராகவும் பணியாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மயங்கி சரிந்து விழுந்துள்ளார். 


இதனையடுத்து இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது நாகாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement