• Jul 26 2025

நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற IAS அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டிய இயக்குனர் பாலா

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

பாலா பழனிசாமி என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மேலும் இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். 


இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார்.  பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் அடுத்த வந்த நந்தா சூர்யாவை தலையில் தூக்கி கொண்டாட வைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா சில காரணங்களால் இப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் தற்போது இப்படத்தில் புதிதாக ஒருவர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.


இந்நிலையில், ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு IAS அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். பாலா சார் சிறுது நேரத்தில் வந்துவிடுவார் வெயிட் பண்ணுங்க என்று அவரிடம் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.

அப்போது இயக்குனர் பாலா வரும் நேரத்தில் அந்த IAS அதிகாரியை பார்த்து "யார் இந்த *****" என்று பாலா கேட்டுள்ளாராம். இதனால் அந்த அதிகாரி சற்று ஷாக்காகியுள்ளார். இதன்பின் பாலா 'நீ ஒழுங்கா நடிக்கலனா கொரவளைய புடிச்சு கடிச்சிருவேன்' என்று பாலா கூறியுள்ளார். 


இதன்பின் வெளியே வந்த IAS அதிகாரி அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணனிடம் ' எனக்கு நடிப்பு வேண்டாம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் ' என்று கூறினாராம்.  

Advertisement

Advertisement