• Jul 25 2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் கமிட்டான நயன்தாரா- ராகவா லாரன்ஸும் வருகின்றாரா?- அடுத்த பட அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இளம் இயக்குநராக இருந்தாலும் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விக்ரம் என்னும் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் வேற லெவல் வெற்றியும் பெற்றது. அத்தோடு வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனை அடுத்து தளபதி 67 என்னும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பனது அடுத்த ஆண்டு தொடங்கும் என ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த நிலையில் லோகேஷ் தயாரிப்பாளராகவும் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


அதன் படி இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ள திரைப்படத்தை தான் தயாரிக்கவுள்ளாராம்.இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க உள்ளார்.


 இப்படம் மூலம் நயன்தாராவும், ராகவா லாரன்ஸும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement