• Jul 25 2025

விஜய் பேசிய கெட்ட வார்த்தை Theatre-ல் வருமா... பகிரங்கமாக பதிலளித்த இயக்குனர் லோகேஷ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லியோ திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது விஜய் பேசிய கெட்ட வார்த்தை Theatre-ல வருமா? என கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பதிலளித்துள்ளார். 


நாளை லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகா உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஊடகவியலாளர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களின் படங்களை ரசிகர்கள் உட்பட குழந்தைகளும் பார்வையிடுகின்றனர் ஆகவே அந்த கெட்ட வார்த்தையை தவிர்த்து இருக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.


அதற்கு லோகேஷ் கனகராஜ் "லியோ என்னமாதிரியான படம் என்பதனை காட்டுவதற்காகவே அப்படியான வார்த்தைகள் வைக்கப்பட்டது. கெட்டவார்த்தைகள் படத்தில் பயன்படுத்தி அதில் நாங்கள் எந்த பயனும் அடையப்போவது இல்லை.


படத்தில் அந்த கதாபாத்திரம் எப்படி பட்டது என்பதை காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டது. அந்த காட்சி வரும் போது அவரது முக பாவனைக்கு ஏற்றால் போல இருக்க அப்படி செய்தோம் இது வரை அவர் நடித்த படங்களில் இல்லாத விதத்தில் காட்ட எடுக்கபட்ட முயற்சியே தவிர வேறு ஏதும் இல்லை.

விஜய் அவர்களாக பேசவிலையில் அந்த காதாபாத்திரமாகவே அதை பேசவைத்தேன். குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்பதால் தற்போது அந்த வார்த்தை வரும் காட்சியில் மியூட் செய்துவிட்டேன். கட்டாயமாக தியேட்டரிலும் அது மியூட்டில் தான் வரும் என லோகேஷ் பதிலளித்தார்  

Advertisement

Advertisement