• Jul 26 2025

காதலியுடன் எளிமையாக நடந்த இயக்குநர் மித்ரனின் கல்யாணம்.. வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகத் திகழ்ந்து வருபவர் பி.எஸ்.மித்ரன். இவர் 'இரும்புத்திரை' என்ற படத்தின் மூலமாக கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். தன்னுடைய முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பெற்ற பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்தார்.


அந்தவகையில் சிவகார்த்திகேயனை வைத்து 'ஹீரோ' திரைப்படத்தினை இயக்கினார். இப்படமானது 2019-ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. இப்படத்திலும் இரும்புத்திரையில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தான் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படமானது மித்ரனுக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.


இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து 'சர்தார்' படத்தினை எடுத்தார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து அசத்தி இருந்தனர். அதுமட்டுமல்லாது பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படமானது ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது. இதனையடுத்து தற்போது கே.ஜி.எஃப் நாயகன் யாஷுடன் பி.எஸ்.மித்ரன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.


இந்நிலையில் இன்றைய தினம் மித்ரனின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. அந்தவகையில் இவர் பிரபல சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரைத் தான் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மேலும் இவர்களது திருமணத்தில் மேயாத மான், ஆடை போன்ற படங்களின்உடைய இயக்குநர் ரத்னகுமார் மற்றும் அயலான் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் - ஆஷா மீரா ஜோடியில் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement