• Jul 25 2025

விஜய் சேதுபதி படத்தோட ஸ்கிரிப்ட் குறித்து உளறிக் கொட்டிய இயக்குநர் மிஷ்கின்! அப்போ ஷூட்டிங் தாமதத்திற்கு இதான் காரணமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ள மும்பைகர் ஜூன் 2ம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து மேலும் பல படங்களும், வெப் சீரிஸும் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள விஜய் சேதுபதி, மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் பேசியது வைரலாகி வருகிறது.ஹீரோ, வில்லன், கேமியோ ரோல் என கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் வெரைட்டியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடந்தாண்டு விக்ரம், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து மாஸ் காட்டினார். 

அதனைத் தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ஃபார்ஸி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருந்தது.

இதனிடையே மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. 

 விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்கிவிட்டதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது.ஆனால், விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் வேலைகள் இன்னும் தொடங்காமல் இருப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. 

அதாவது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இப்போதுதான் தொடங்கியுள்ளாராம் மிஷ்கின். மொத்தமாகவே அரை மணி நேரம் அளவிற்கு தான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை முடித்துள்ளாராம். அதனால், விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் தாமதமாகும் என்றே தெரிகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement