• Jul 24 2025

கண் திறக்கும் நண்பா... விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி முன்வைத்த கோரிக்கை...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் படங்களில் நடித்து வருவது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் வரும் சட்டமன்ற தேர்தலில் இருந்து அவர் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


இதனையடுத்து விஜய் அரசியலில் அடி எடுத்து வைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அதன் ஒரு பகுதியாகவே நடந்து முடிந்த பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்தலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு விழா நடத்தினார்.


இதற்கு தமிழ் சினிமாவில் பல முக்கிய பிரபலங்கள் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குநர் சீனுராம சாமி விஜய்யை வாழ்த்தியதோடு ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். 

அந்தவகையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் "கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' இளைய தளபதி @actorvijay உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement