• Jul 24 2025

தளபதி 68 படத்தால் அஜித்தின் மங்காத்தா 2 பட வாய்ப்பை மிஸ் பண்ணிய வெங்கட் பிரபு..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் 50வது படமாக உருவான மங்காத்தா 2011ம் ஆண்டு வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, அஞ்சலி, ப்ரேம்ஜி, வைபவ், மகத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையில் பாடல்கள் ஹிட் அடிக்க, படமோ ப்ளாக் பஸ்டர் ஹிட்டானதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியது.

இந்தப் படத்தில் அஜித் வாண்ட்டடாக அவரே கால்ஷீட் கொடுத்து நடித்திருந்தார். இதுபற்றி வெங்கட் பிரபு பலமுறை கூறியதுண்டு. சால்ட் & பெப்பர் லுக், நெகட்டிவ் ஷேட் என செம ஸ்மார்ட்டான வில்லத்தனத்துடன் வெரைட்டியாக நடித்திருந்தார் அஜித். அதேபோல், வெங்கட் பிரபுவின் மேக்கிங் அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. அஜித் கேரியரில் பெஸ்ட் படமாக அவரது ரசிகர்கள் இன்றும் கொண்டாடுவது மங்காத்தாவை தான்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அப்படியொரு வாய்ப்பு வந்தும் அதனை வெங்கட் பிரபு மிஸ் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மாநாடு, மன்மத லீலை, கஸ்டடி என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார் வெங்கட் பிரபு. அதேநேரம் ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதால், அதில் வெங்கட் பிரபுவை இயக்குநராக போடலாம் என லைகா முடிவெடுத்ததாம்.

அதன்படி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகமாக ஏகே 62 உருவாகும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், வெங்கட் பிரபு தனது படங்கள் குறித்த அப்டேட்டை லூஸ் டாக் விடுவார் என்பதால், அஜித் ரிஜக்ட் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது உண்மையில்லை என்றும் அப்போதுதான் விஜய்யின் தளபதி 68 படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்கில் வெங்கட் பிரபு பிஸியாக இருந்ததாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித்துக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையே நல்ல பிரண்ட்ஷிப் இருப்பதால் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறி வருகின்றனர். அதேநேரம், மங்காத்தா இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement